ADVERTISEMENT

வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளா;வெளிமாநிலங்களிலிருந்து ரயில், கப்பல் மூலம் குடிநீர்!!

09:22 PM Aug 18, 2018 | vasanthbalakrishnan

கேரள மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் மாநிலத்தையே புரட்டிப்போட்டிருக்கிறது இந்த நிலையில் உணவு இருப்பிடம் இல்லாமல் மக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெள்ளப்பகுதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது இந்த நிலையில் மக்களுக்கு குறிப்பாக தேவைப்படக்கூடிய விஷயங்களில் ஒன்றான குடிதண்ணீர் பல்வேறு மாநிலங்களில் இருந்து கப்பல்கள் மூலமாகவும் ரயில்கள் மூலமாகவும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது மும்பையிலிருந்து ஐஎன்எஸ் தீபக் கப்பலில் 8 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது சென்னையிலிருந்து தென்னக ரயில்வே 2.8லடசம் லிட்டர் குடிநீரை பெரிய சிந்தடிக் டேங்கு மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் 1லட்சம் குடிநீர் பாட்டில்கள் அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோக பல்லூர் பிலேண்ட்டிலிருந்து 15000 பாக்ஸ் குடிநீர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

புனேவில் இருந்து 29 டேங்கர்கள் மூலம் 14.5 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல 15 டேங்கரில் 9 லட்சம் லிட்டர் குடிநீர் மத்தியபிரதேச மாநிலம் ரட்லம் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் பல இடங்களுக்கு குடிதண்ணீரும் உணவுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் கொண்டு செல்லப்படும் குடிநீர் குடிக்க உகந்ததா என பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

கேரள மாநிலத்திற்கு ஒருபுறம் அரசுகளும் மக்களும் கோடிக்கணக்கில் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT