கடந்த நான்கு நாட்களாக சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் சிக்கி தவித்த கணவன் மனைவியை மூன்று மணி நேரபோராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் தென்கரை பகுதியில் உள்ள கருப்பூர் கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள திட்டுபகுதியில் ஆலம்பாடியை சேர்ந்த ராமு(70) அவரது மனைவி பழனியம்மாள்(65) ஆகியோர் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாத போது ஆற்றின் திட்டு பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் எப்போதும் போல கடந்த நாட்களுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்லும் போது அந்த திட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற நாள் முதல் கொள்ளிடம் ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால். அவர்களால் ஆற்றை கடந்து வரமுடியவில்லை. பின்னர் அவர்கள் வைத்தஇருந்த உணவு பொருட்களை கொண்டு 4 நாட்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.

Advertisment

FLOOD

FLOOD

இதனைதொடர்ந்து சனிக்கிழமை காலை கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்ததை பார்த்த அவர்கள் பயந்து போய் ஆற்றின் நடுவே உள்ள திட்டுபகுதியில் இருந்து வேட்டியை அவிழ்த்து அசைத்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று மணி நேரம் போராடி போட் மூலம் ஆற்றின் திட்டு பகுதிக்கு சென்று கனவன் மனைவியை மீட்டனர். இதில் சிதம்பரம், மற்றும் சேத்தியாதோப்பு காவல் கோட்ட துணைகண்காணிப்பாளர் பாண்டியன், ஜவஹர்லால், அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் வீரமணி, தீயணைப்பு துறை சிதம்பரம் ஆய்வாளர் புருசோத்தமன் உள்ளிட்ட காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டு கணவன்,மனைவியை மீட்டதற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டார்கள்.