ADVERTISEMENT

"கரோனா அச்சுறுத்தலிலும் தேர்தல் பணி" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி!

04:55 PM Feb 26, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது பேசிய, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்சனைகளைச் சமாளித்து வருகிறோம். தேர்தலைச் சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்குப் பெரும் பங்கு உள்ளது. கரோனா அச்சுறுத்தல் கருதி முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகிறோம். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், கரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலை வணங்குகிறோம். கரோனா காலத்தில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தியது மிகவும் சவாலாக இருந்தது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தலைவிட அதிகளவாக 57% வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தினோம். தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தமிழகம்- 234, புதுச்சேரி- 30, மேற்கு வங்கம்- 294, கேரளா- 140, அசாம்- 126 ஆகிய ஐந்து மாநிலங்களில் மொத்தம் உள்ள 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஐந்து மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT