ADVERTISEMENT

ராகுலுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - கூட்டணி குறித்து பேச்சு

04:41 PM Nov 01, 2018 | rajavel



ADVERTISEMENT

ஆந்திர மாநில முதல் அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக என்.டி.ராமாராவ் அவர்களால் உருவாக்கப்பட்டது தெலுங்கு தேசம் கட்சி. அப்போதிலிருந்தே இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்து வந்தது. வரும் டிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது முதல் முதலாக இரு கட்சியும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்க சிறப்புத்தகுதி வழக்க கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கோரிக்கை நிறைவேறாத காரணத்தினால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியே வந்தது. பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க சந்திரபாபு நாயுடு நினைத்தார். அதன் முதல் முயற்சியே ராகுலுடனான இந்த சந்திப்பு. தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டீரிய சமிதி கட்சியை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதால் இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT