Skip to main content

"நான் நிறைய கற்றுக் கொண்டேன்" - ராகுல்காந்தி பேட்டி

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

rahul gandhi press meet at madurai

 

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைப் பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை காண்பதற்காக முதன்முறையாகத் தமிழகத்திற்கு வந்துள்ளேன். தமிழ்க் கலாச்சாரத்துக்கும், தமிழக மக்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளையாட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் விளையாடுவதைப் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தமிழக மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன். அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்களை நான் பாராட்டுகிறேன். என்றும் தமிழக மக்களுடன் இருப்பதைக் கடமையாகக் கருதுகிறேன். தமிழக கலாச்சாரத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.

 

மனிதர்களால் காளைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை. இளைஞர்களுக்குச் சிறிய காயம் ஏற்பட்டது. அது தவறில்லை.  இந்த கலாச்சாரம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்க் கலாச்சாரத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முயல்கிறது. தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலாச்சாரத்திற்கும் நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம். தமிழர்களின் உணர்வுகளை எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அழிக்க முடியாது. தமிழகத்தின் கலாச்சாரத்தையும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பற்றி என்னிடம் எடுத்துக் கூறினார்கள். இதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டம் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு அல்ல, அவர்களை அழிப்பதற்காகவே. விவசாயிகளையும் விவசாய பொருள்களையும் பிரதமர் அழிப்பதற்குக் காரணம் அவருடைய 3 நண்பர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காகவே. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு அவர்களை அழிப்பதற்கு மத்திய அரசு குறி வைத்துள்ளது. விவசாயிகளைப் பலவீனப்படுத்த நினைத்துவிட்டால் இந்தியாதான் பலவீனப்படும். மத்திய அரசு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு உதவியாக இல்லை. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவிய போது பிரதமர் ஏன் மௌனமாக இருந்தார், ஏன் அவர் குரல் கொடுக்கவில்லை" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.