புதுவையில் 2021 சட்டமன்றத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு எனப் பரபரப்பாக இயங்கிவருகிறது. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவக்கியுள்ள இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 15 தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், முதல்வர் நாராயணசாமி பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி தேர்தல் - 14 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Advertisment