Skip to main content

புல்லட் ரெயில் திட்டம் ஏழைகளுக்கானது கிடையாது: ப. சிதம்பரம்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
புல்லட் ரெயில் திட்டம் ஏழைகளுக்கானது கிடையாது: ப. சிதம்பரம்

புல்லட் ரெயில் திட்டம் ஏழைகளுக்கானது கிடையாது என்றும், வசதி படைத்தவர்ளுக்கானது எனவும், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக அகமதாபாத் மற்றும் மும்பை இடையே புல்லட் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதற்கான திட்டப் பணிகளை பிரதமர் மோடி கடந்த வாரம் துவக்கி வைத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப. சிதம்பரம், இந்த திட்டம் மக்கள் நலப் பணிகளுக்கான நிதியை அழித்து விடும் என்று எச்சரித்தார். ரெயில் விபத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், புல்லட் ரயிலுக்கு பதிலாக நிலுவையில் இருக்கும் ரெயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சார்ந்த செய்திகள்