ADVERTISEMENT

குஜராத்தில் மோடி அரசை கலைக்க விரும்பினார் வாஜ்பாய்.. யஷ்வந்த் சின்ஹா அதிரடி பேச்சு!

03:51 PM May 11, 2019 | santhoshb@nakk…

குஜராத்தில் 2002- ஆம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத்தில் பாஜக தலைமையிலான அரசில் அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்நிலையில் குஜராத்தில் நடந்த கலவரத்தால் நரேந்திர மோடியை பதவியை விட்டு நீக்கவும், குஜராத் அரசை கலைக்கவும் அப்போதைய பிரதமர் அடல் பீகாரி வாஜ்பாய் முடிவு செய்து இருந்ததாகவும், ஆனால் அப்போதைய இந்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி குஜராத்தில் ஆட்சி கலைத்தால் , தான் பதவியை விட்டு விலகி விடுவேன் என வாஜ்பாயிடம் அத்வானி தெரிவித்ததால் தான் குஜராத் அரசு கலைக்கும் முடிவை வாஜ்பாய் கைவிட்டார் என பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும், பாஜகவின் மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்ஹா போபாலில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது சொந்த பயணத்திற்கு போர் கப்பலை பயன்படுத்தினரா? என்பது தொடர்பான விளக்கத்தை அப்போதைய கடற்படை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். ஒரு நாட்டின் பிரதமராக இருந்துக் கொண்டு இப்படி பொய் பேசியிருக்கக் கூடாது என பிரதமரை யஸ்வந்த் சின்ஹா கடுமையாக சாடினார். 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி அதன் பிறகு பாஜகவின் மூத்த தலைவர்களை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஓரங்கட்டியுள்ளார் என்றார் மிகையாகாது.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் புதிய அரசு பதவி ஏற்கும் விழாவில் அத்வானி பிரதமருக்கு வணக்கம் தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி அத்வானி அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்கள், செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாஜக கட்சியை உருவாக்கி அதை மிகப்பெரிய கட்சியாக மாற்றியவர் அத்வானி ஆவர். இவருக்கு ஆதரவாக பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT