ADVERTISEMENT

”பழங்குடியின மக்களை வன்முறைக்கு தூண்ட நாங்கள் விரும்பவில்லை”- சென்டினல் பழங்குடியின மக்கள் குறித்து டிஜிபி

03:31 PM Nov 27, 2018 | santhoshkumar


கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தமான் தீவிலுள்ள வடக்கு சென்டினல் தீவில் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக வசித்து வரும் சென்டினல் பழங்குடியின மக்களுக்கு மதத்தை போதிக்க சென்றதாக சொல்லப்படும் அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ், சென்டினல் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார். ஆலனை அந்த பகுதிக்கு அழைத்து சென்ற மீனவர்கள், பழங்குடியின மக்கள் கொன்றதாக போலிஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து ஜான் ஆலனின் உடலை மீட்க இந்திய கடல்படை அத்தீவின் கடலோர பகுதிக்கு சென்றது. ஆனால், தீவின் கடலோர பகுதியிலேயே பழங்குடியின மக்கள் வில்லுடனும் அம்புடனும் நின்றுகொண்டிருந்ததால், இந்திய கப்பல்படை வீரர்கள் பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

ADVERTISEMENT

ஆலனின் மரணம் குறித்து வெளியுலகிற்கு தெரிந்தவுடன், சென்டினல் பழங்குடியின மக்களின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள பலர் முயற்சி செய்து வருகின்றனர். அவரது உடலை மீட்க நாங்கள் பல வழிகளை உருவாக்கினோம். ஆனால், அவை அனைத்தும் தோல்விலேயே முடிந்தது. இதற்கு மேலும் அவரது உடலை மீட்க முயற்சித்தால், பழங்குடியின மக்களை வன்முறைக்கு தூண்ட நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் நம்முடைய பொக்கிஷம் போன்றவர்கள் என்று அந்தமான் நிக்கோபார் தீவுகளின் டி.ஜி.பி தேபேந்திர பதக் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

”அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். காவல்துறையினர் ஆலன் உடலை மீட்க அந்த பகுதிகளுக்கு செல்வதால் மேலும் தீங்குகளே ஏற்படும். இதனால் பெரிய அளவில் பதற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆலன் உடலை மீட்கும் முயற்சிகளை உடனடியாக கைவிடுவதே நல்லது” என்று சில மானுடவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT