Published on 27/10/2023 | Edited on 27/10/2023

அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இன்று மாலை சுமார் 6.52 மணி அளவில் ஏற்பட்ட நில அதிர்வு அந்தமான் நிகோபார் தீவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.