ADVERTISEMENT

புதிய அனல்மின் நிலையங்கள் அமைக்க 200 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது - மத்திய மின்சாரவாரியம்

12:34 PM Dec 24, 2018 | tarivazhagan

நாடு முழுவதும் புதிய அனல்மின் நிலையங்கள் அமைக்க 200 இடங்களை கண்டறிந்துள்ளதாக மத்திய மின்சாரவாரிய ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசு ரூ.16,320 கோடி செலவில் வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து இல்லங்களுக்கும் மின்சார வசதி செய்துகொடுப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இடைவெளியில்லாத மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மின்சார வாரியம், மின்சார உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அனல்மின் நிலையம் அமைக்க நாடு முழுக்க 200 தகுதியான இடங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT