கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே மாதம் 3- ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் தமிழகத்தில் வீட்டுக்கு வீடு சென்று மின் அளவீட்டை குறிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்பதால், ஜனவரி, பிப்ரவரியில் செலுத்திய மின்கட்டணத் தொகையை மார்ச், ஏப்ரலுக்கும் செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம்அறிவித்திருந்தது. முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்துவது தற்போதைய மின்நுகர்வு அடிப்படையில் கூடுதலாக இருப்பதாகத் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம்மாற்று ஏற்பாடுகளைச் செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

tamilnadu electricity board announced

அதன்படி "தாழ்வழுத்த தொழிற்சாலைகள் (LT/LTCT), வணிக நிறுவனங்கள் தங்களது மின் இணைப்பின் மின்அளவீட்டை அனுப்பலாம். மின்அளவீட்டினை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இ- மெயில் மூலம் எழுத்து, புகைப்பட வடிவில் அனுப்பலாம். தங்களது மின் இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி, இளநிலைப் பொறியாளருக்கு அனுப்பலாம். www.tangedco.gov.in ல் உதவிப்பொறியாளர் அலுவலக கைப்பேசி, இ- மெயில் விவரத்தை அறியலாம். மின் அளவீடு பெறப்பட்டவுடன் கட்டணத்தைத் திருத்தியமைத்து நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

மின்சாரக் கட்டணத்தை இணையத்தளம் வழியாகச் செலுத்த மின்சார வாரியம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இதற்கான இணையத்தள முகவரி https://www.tangedco.gov.in/index.html (அல்லது) https://www.tnebnet.org/awp/login ஆகும்.