ELECTRICITY BOARD EMPLOYEES PUDUCHERRY GOVERNMENT

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி மின்துறை ஊழியர்கள் நேற்று (01/02/2022) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மின்துறை வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா ஆகியவை நடத்துவதற்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், 1,000- க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் ஊர்வலமாக சென்று மின்துறை அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மத்திய மாநில அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மின்துறை ஊழியர்களும், புதுச்சேரி மின்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இதனிடையே புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட கோரியும், போராடும் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.