style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புயல் பாதித்தநான்கு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த மின்துறை அவகாசம் அளித்துள்ளது.
கடந்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் கிட்டத்தட்ட ஏழு கடலோர மாவட்டங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தது.
இந்த சேதத்தில் அதிகமாக மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து மின்துறை ஊழியர்களின் அயராத உழைப்பால் மின்சாரம் சீர் செய்யப்பட்டு இயல்புநிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் கஜா புயல் பாதித்த 4 மாட்டவங்களுக்கு மட்டும்மின்கட்டணம் செலுத்த மின்துறை சார்பில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு கோட்டங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் உள்ள நுகர்வோர்கள் டிசம்பர் 26-ஆம் தேதிக்குள்ளும் அதேபோல்நாகை 14 பிரிவுகளிலும், புதுக்கோட்டையிலுள்ள நுகர்வோர்கள் 26 ஆம் தேதிக்குள் மின்கட்டணம் செலுத்தவேண்டும் என மின்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.