ADVERTISEMENT

பலூனை தொட்டதற்காக அடித்து கொல்லப்பட்ட 12 வயது சிறுவன்;தீண்டாமையின் உச்சக்கட்டம்!!

10:38 AM Sep 07, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவில் நிகழ்ச்சியில் பலூனை தொட்டதற்காக 12 சிறுவன் ஒருவனை மற்ற 5 சிறுவர்கள் தாக்கி சம்பந்தப்பட்ட சிறுவன் இறந்துள்ள சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.

ஆக்ராவில் அலிகாரிலுள்ள நட்ரோயி கிராமத்தில் சமந்தா கோவிலில் நடைபெற்ற ஜென்மாஷ்டமி திருவிழா எனப்படும் பண்டிகை கொண்டாட்டத்தின் பொழுது கோவிலுக்குள் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பலூனை 12 வயது சிறுவன் தொட்டுள்ளான். பலூனை தொட்ட அந்த சிறுவன் தலித் என்பதன் காரணமாக அங்கிருந்த 5 சிறுவர்கள் அந்த சிறுவனை பலமாக அடித்து விரட்டியுள்ளனர். இதனை சுராஜ் என்ற சிறுவன் பார்த்துள்ளான். அதனை தொடர்ந்து இந்த தகவல் தாக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரியவர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுவன் சுராஜ் கூறுகையில், இருவர் அவனுடைய கையையும் இருவர் காலையும் பிடித்துக்கொண்டனர் அதன் பின் ஒருவன் அவனது வயிற்றில் தாக்கியதாக கூறியுள்ளான்.

ஆனால் இப்படி தாக்கப்பட்ட சிறுவன் வீட்டிற்கு வந்தந்தும் தனக்கு வயிற்று வலிக்குது என கூறியுள்ளான். பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் கடைசியில் இறந்து போனான். இது குறித்து அவனுக்கு சகோதரமுறை உறவினர் சந்தர்பால் என்பவர் கூறுகையில், வீட்டிற்கு வந்ததும் கடுமையாக வயிறு வலிப்பதாக கூறினான். உடனே அவரது அம்மா சாவித்ரி லோக்கலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு முடியாது எனக்கூற உடனே மாவட்ட மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு 12.30க்கு இறந்து விட்டான். அவன் எங்கள் வீட்டின் கடைசி பிள்ளை. சாவித்ரி தன் கணவனை 8 வருடங்களுக்கு முன்பே இழந்து கூலிவேலை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறார். இப்படி பட்ட சூழலில் பலூனை தொட்டதற்கு அடித்துள்ளனர் இது தீண்டாமையின் உச்சம் இதனால் அவன் கடைசியில் இறந்தே போயிருக்கிறான் என்றார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். பிரேதபரிசோதனைக்கு பிறகு முழுத்தகவல் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT