20 வயதான கல்லூரி மாணவியை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 18 வயது இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேரளாவின் கோட்டயம் பகுதியில் நேற்று காலை 20 வயதானபெண் கல்லூரிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்றிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 18 வயது இளைஞன் ஒருவன் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். அப்போது வாக்குவாதம் பெரிதாக, திடீரென அந்த இளைஞன் தனது கையில் கொண்டு வந்திருந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை அந்த பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளான்.

FIRE

80 சதவீத தீ காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவல்லாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் கும்பநாடு பகுதியை சேர்ந்த அஜின் ரெஜி மேத்யூ என்ற அந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வரும் அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

Advertisment

இது தொடர்பாக கைது செய்யப்பட்டவனிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அந்த பெண்ணை அவன் காதலித்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவதாக அந்த பெண்ணின் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அவன் தெரிவித்துள்ளான்.

மேலும் அந்த இளைஞனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொள்ளாச்சி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.