புதுச்சேரியில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை ஷாப்பிங் மாலுக்குள்அனுமதிக்க மறுத்தற்குபல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடலூர் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்திற்குள் உணவு டெலிவரி செய்ய சென்ற ஊழியர் ஒருவர் தான் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் டீ சர்ட் அணிந்திருந்தார்.அவரை வணிக வளாக ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தானும் படித்த பட்டதாரிதான் என்னை ஏன் அனுமதிக்க மாட்டீர்கள் என ஷாப்பிங்மால் ஊழியர்களிடம் அந்த இளைஞர் எடுத்துச் சொன்னாலும் ஊழியர்கள் அவரது பேச்சை கேட்காமல் அவரை வெளியேற்றினர்.
ஆடையை காரணம் காட்டி ஒருவரை வெளியேற்றிய செயல் கண்டிக்கத்தக்கது என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்தவாக்குவாதத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.