ADVERTISEMENT

’கஜாவோ..கெஜாவோ..அப்புறம் பார்த்துக்கலாம் மாப்ளே’-முதல்வர் பழனிச்சாமி

09:26 PM Nov 15, 2018 | jeevathangavel

ADVERTISEMENT

’’கஜாவோ கெஜாவோ அதை பார்த்துக்கொள்ளத்தான் அமைச்சர்கள் இருக்கிறார்களே. எனக்கு டென்ஷன் தீர வேண்டும் என்றால் நம்ம ஊருக்கு வந்தால்தான் முடியும். வழக்கமாக எது நடந்தாலும் இந்த அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள். அப்புறம் பார்த்துக்கலாம் மாப்ளே. நம்ம ஊர் பிரச்சனையை பேசுவோம்’’

ADVERTISEMENT

-என ஜாலியாக கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஐந்து நாள் பயணமாக சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம்தான் முதலமைச்சர் பழனிச்சாமியின் சொந்த ஊர். இங்கு நேற்று 14ம் தேதி மாலை வருகை தந்த பழனிச்சாமி, இரவில் சேலத்திலும், 15ம் தேதி இரவில் சிலுவம்பாளையம் தோட்டத்தில் உள்ள கிராமத்து வீட்டிலும் பிறகு சேலத்தில் உள்ள அவரது வீட்டிலும், தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல்லில் அரசு விழாக்களில் கலந்துகொள்வதோடு தர்மபுரி, கிருஷ்ணகிரியிலும் கலந்து கொள்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊருக்கு வந்திருப்பது உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கஜா புயல் தாக்கம். சென்னையில் தொடங்கி ராமநாதபுரம் வரை 9 மாவட்டங்களில் கஜா புயலின் பீதி மக்களிடம் உள்ளது. இதற்கு அரசு ரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுப்புகளாக வந்தாலும் ஒரு முதல்வராக சென்னையில் இருந்து இந்த புயலின் பாதிப்புகளில் இருந்து மக்களுக்கான நிவாரணப்பணிகளை முடிக்கிவிட வேண்டிய கடமையில் இருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. இந்த நிலையில், தனது சொந்த ஊருக்கு வந்ததில் வேறு என்ன காரணம் இருக்கும் என நெருங்கியவர்களிடம் பட்டிமன்றமே நடக்கிறது.


இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக, 15ம் தேதி இன்று இரவு சிலுவம்பாளையம் தோட்டத்தில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடியுள்ளார் முதல்வர். அப்போது, ‘ கஜாவோ கெஜாவோ.. அதை பார்த்துக்கொள்ளத்தான் அமைச்சர்கள் இருக்கிறார்களே... எனக்கு டென்ஷன் தீர வேண்டும் என்றால் நம்ம ஊருக்கு வந்தால்தான் முடியும். வழக்கமாக எது நடந்தாலும் இந்த அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள். அப்புறம் பார்த்துக்கலாம் மாப்ளே. நம்ம ஊர் பிரச்சனையை பேசுவோம்’’எனக்கூறிவிட்டு, உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT