Skip to main content

எடப்பாடி பழனிசாமியிடம், நரேந்திர மோடி காட்டுவதை போல, மோடியிடம் ட்ரம்ப் தனது அதிகாரத்தை காட்டியுள்ளார் - கோவி.லெனின் பேச்சு!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூத்த பத்தரிகையாளார் கோவி. லெனினிடம் இதுதொடர்பான பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

  ுப



கரோனா தொற்றுக்கு தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய அரசும் இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் அமெரிக் அதிபர் ட்ரம்ப் மோடியிடம் இந்த மருந்தை கேட்டதாகவும், அப்படி தரவில்லை என்றால் தக்க எதிர்விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தாகவும் ஒரு செய்தி சொல்லப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன? 

 

nakkheeran app



அமெரிக்கா கரோனா காரணமாக நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மருந்து கரோனாவிற்காக தயாரிக்கப்பட்டது அல்ல. மலேரியா காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் ஒன்று. வெளிநாடுகளில் அத்தகைய காய்ச்சல்களை முற்றிலும் ஒழித்துள்ளார்கள். இந்தியவில் இன்றும் அந்த மாதிரியான காய்ச்சல் இருப்பதால் இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து தயாரிப்பில் இருக்கிறது. பெரும்பாலும் இந்தியாவில் தங்களை தாங்களே மருத்துவர்களாக நினைத்துக்குகொண்டு மருந்துகளை வாங்கிக்கொள்ளும் பழக்கம் அதிகம் இருக்கின்றது. இதில் அனைவரும் அடங்குவர். அதைபோன்று இந்த மருந்தை கரோனாவுக்காக கொடுக்கலாம் என்று தெரியவந்ததை அடுத்து இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்தது. இந்நிலையில், இந்த மருந்தை தங்களுக்கு வேண்டும் என்று ட்ரம்ப் மோடியிடம் கேட்டுள்ளார். 

அவ்வாறு தர முடியாவிட்டால் அதற்கான எதிர்விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டும் என்று, தான் சொல்லியிருப்பதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதாவது, நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் நரேந்திர மோடி காட்டுவதை போல, மோடியிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தை காட்டியுள்ளார். ஆனால் அதை மத்திய அரசு சொல்லாமல், மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கிறார்கள். கொடுப்பியா மாட்டியா என்பதை கெஞ்சலாகவும், கொடுத்துவிடுகிறேன் என்பதை தைரியமாகவும் இங்கு சிலர் மொழிப்பெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.