Skip to main content

“கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி” - அர்ஜுன் தாஸ் விளக்கம்

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
arjun das speech in rasavathi pre release event

மௌனகுரு, மகாமுனி படங்களைத் தொடர்ந்து சாந்தகுமார் இயக்கியுள்ள அடுத்த படம் ரசவாதி. இப்படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்க ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், சுஜித் சங்கர், ஜி.எம்.சுந்தர், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சாந்தகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் ட்ரைலர் வெளியானது. மே 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். 

அப்போது அர்ஜூன் தாஸ் பேசுகையில், “எனக்கும் இந்தப் படத்தில் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்றுதான் கூப்பிடுவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. மே 10 அன்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்" என்றார். 

இயக்குநர் சாந்தகுமார், "என்னுடைய படம் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் சொன்னால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழுதான். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவைச் சேர்ந்தவர்கள், பப்ளிசிட்டி என எல்லாருமே தங்கள் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளனர். 'ரசவாதி' சிறப்பாக வந்துள்ளது. 'மகாமுனி', 'மெளனகுரு' படத்திற்கு அடுத்தபடியாக இந்தப் படம் வேறொரு அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

சார்ந்த செய்திகள்