Skip to main content

ரிஷாப் பாண்டை வம்புக்கு இழுத்த ப்ராட்! - ஐ.சி.சி. நடவடிக்கை என்ன?

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய வீரர் ரிஷப் பாண்ட் விக்கெட் வீழ்த்தியபோது, வம்புக்கு இழுத்த ப்ராட் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.
 

Broad

 

 

 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்த ரிஷப் பாண்ட் விக்கெட்டை இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ப்ராட் வீழ்த்தினார். இதையடுத்து, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த அவர், ரிஷப் பாண்டை நோக்கி ஆக்ரோஷமாக பேசினார். அவரது இந்த நடத்தை பலராலும் கண்டிக்கப்பட்டது. போட்டி நடுவர்கள் எராஸ்மஸ் மற்றும் கேஃபனி ஆகியோர் இதுகுறித்து புகாரளித்திருந்தனர். 
 

 

 

இந்நிலையில், ஐ.சி.சி. நடத்தை விதிகள் சட்டத்தில் உள்ள 2.1.7 பிரிவை ப்ராட் மீறியதாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, பந்துவீசுபவர் விக்கெட்டை வீழ்த்தியவுடன் பேட்ஸ்மேனைப் பார்த்து வம்புக்கு இழுக்கும் விதமாகவோ, கோபம் ஏற்படுத்தும் விதமாகவோ பேசக்கூடாது. ஆனால், ஸ்டூவர்ட் ப்ராட் அதை மீறியதால், அவர்மீது நடவடிக்கை எடுத்ததோடு, ஒரு புள்ளியையும் குறைத்து உத்தரவிட்டுள்ளது ஐ.சி.சி.
 

ஐ.சி.சி. நடத்தை விதிகள் 2016-ஆம் ஆண்டு மாற்றப்பட்டன. அதிலிருந்து ஸ்டூவர்ட் ப்ராட் மீது எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.