Skip to main content

"பழைய பள்ளிக்கூடம்" இந்திய அணியைச் சாடிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Michael Vaughan

 

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

 

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என்னைப் பொறுத்தவரை தற்போதைய இந்திய ஒருநாள் அணி மிகவும் பழைய பள்ளிக்கூடம். வெறும் 5 பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் போதுமான அளவில் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து வடிவ போட்டியிலும் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்துமென்று நினைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.