Skip to main content

இலங்கை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது லஞ்ச புகார்...!

Published on 08/11/2018 | Edited on 08/11/2018

இலங்கை சபாநாயகர் கரு. ஜெயசூரியா மீது லஞ்ச ஆணையக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். மேலும் இரணில் விக்கிரமசிங்கேவும் இதற்கு ஆதரவாக செயல்பட்டு குற்றும் புரிந்துள்ளார் என்றும் புகார் கூறப்படுகிறது. 

 

jj

 

சமீபத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு. ஜெயசூரியா, அதிபர் சிறிசேனாவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் எனவும். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது. அதுவரை ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமர் எனவும் தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி அன்று இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரியா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் பின் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த கரு. ஜெயசூரியாவிற்கு பதிலாக புதிய சபாநாயகராக ராஜபக்சே காட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தனே பொறுபேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்