Skip to main content

பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட வழக்கை தள்ளுபடிசெய்து இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள உச்சநீதி மன்றம்...

Published on 13/09/2018 | Edited on 13/09/2018
hafiuz


மும்பை 26\11 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக சொல்லப்படுபவர் ஜே.யூ.டி அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையீத். இவர் ஜே.யூ.டி என்ற அமைப்பையும் அந்த அமைப்பு மூலமாக தொண்டு நிறுவனமான பலாஹி இன்சனியாத் பவுண்டேஷன் (FIF) என்ற அமைப்பையும் நடத்தி வந்தார். 
 

இவரின் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவை பட்டியலிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பாகிஸ்தான் அரசும் இந்த அமைப்பிற்கு தடை விதித்தது. தனிநபர், நிறுவனம் என யாரும் இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்யவும் தடை செய்தது. ஹபீஸ் சயீத் தரப்பு, பாகிஸ்தான் அரசின் தடையை எதிர்த்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் முறையீட்டது. பின்னர், ஹபீஸ் சயீத் அமைப்புகள் சமூக பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி அளித்தது.
 

லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவு பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு எதிராக இருந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, ஹபீஸ் சயீத்தின் இயக்கம் சமூக பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்