Skip to main content

செயற்கை நிலவை உருவாக்கிய சீனா!

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

china

 

செயற்கை சூரியனை உருவாக்கி ஆராய்ந்து வரும் சீனா, தற்போது செயற்கையான நிலவை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கை நிலவின் மேற்பரப்பில் நிலவில் உள்ளது போன்றே பாறைகளும், தூசுகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

 

விண்வெளி திட்டங்களை சோதிக்கவும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் இந்த செயற்கை நிலவு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த செயற்கை நிலவைக்கொண்டு, நிலவில் 3டி பிரிண்டிங் மூலம் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்தும் சீனா சோதிக்கவுள்ளது.

 

2030 ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கச் சீனா திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்