Skip to main content

சம்பளம் போதவில்லை எனக் கூறும் போரிஸ் ஜான்சன்..? அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக்...

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

borris johnson not satisfied with his remunaration

 

பிரதமர் பதவிக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை என்பதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

பத்திரிகையாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் இருந்துவந்த போரிஸ் ஜான்சன், கடைசியாக நடைபெற்ற பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பிரெக்ஸிட், கரோனா என அடுத்தடுத்த சிக்கல்களைச் சமாளித்துவரும் போரிஸ் ஜான்சன், தனது சம்பள விஷயத்தில் அதிருப்தி அடைந்திருப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த சிலர் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராகப் பதவி ஏற்பதற்கு முன்பு பத்திரிகையாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் மாதம்தோறும் சுமார் 1,80,000 பவுண்டுகள் வரை சம்பாதித்து வந்தார் அவர்.

 

ஆனால், பிரிட்டன் சட்டப்படி அந்நாட்டின் பிரதமருக்கு ஆண்டுக்கு 1,50,402 பவுண்டுகள் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும். எனவே, தனக்கு வழங்கப்படும் ஊதியம் காரணமாக போரிஸ் ஜான்சன் அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் பதவி விலகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை போரிஸ் ஜான்சன் பதவி விலகினால், அடுத்த பிரதமராகப் பதவியேற்க வாய்ப்பிருப்பவர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்