Skip to main content

கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2200 ஆண்டுகள் பழமையான நகரம்... ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்...

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடலுக்குள் மூழ்கிய நகரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

 

ancient lost city of egypt found under sea

 

 

எகிப்து கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த நகரத்தில் 2200 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக கடலுக்குள் சென்ற டைவர்கள், அங்கிருந்த கோயில் ஒன்றையும், பழைய கப்பல் ஒன்றையும் கண்டறிந்தனர். இந்த கப்பல் கிபி 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கண்டறியப்பட்ட கோவிலில் உள்ள பிரம்மாண்ட சிலைகள், நாணயங்கள் மற்றும் பொருட்கள் 2200 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்டது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. கோயில்களின் நகரம் என்றும் ‘lost city of Atlantis in Egypt' என்றும் அழைக்கப்பட்ட இந்த நகரம், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வ செழிப்புடன் இருந்திருக்க கூடும் எனவும், பின்னர் நிலநடுக்கம் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவால் கடலுக்குள் சென்றிருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நகரம் கடலுக்குள் சென்ற நிலையில் இதன் வழியாக கிபி மூன்றாம் நூற்றாண்டு பயணம் செய்த கப்பல் அங்கு மூழ்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்கள், சிலைகள், தூண்கள் என இந்த கண்டுபிடிப்பு வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். 

ancient lost city of egypt found under sea


 

சார்ந்த செய்திகள்