Skip to main content

காவல்துறையில் மீண்டும் ஒரு தற்கொலை - பணிச்சுமையா? அதிகாரிகள் டார்ச்சரா ?

Published on 15/02/2019 | Edited on 15/02/2019
t

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் நிலையத்தில் க்ரைம் பிரிவில்  தலைமை காவலராக பணி புரிந்து வந்தவர் முனியன். 

 

ஆரணி அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த முனியன் பிப்ரவரி 14 ந்தேதி  அய்யம்பேட்டை கிராமத்திலுள்ள குளத்தின் அருகே மயங்கிய நிலையில் இருந்தவரை அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி குடும்பத்தாருக்கு தகவல் கூறினர். அவரின் அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதனால் அதிர்ந்துப்போன உறவினர்கள் உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்.  ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக களம்பூர் காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.   இறந்த முனியன் மனைவி சரஸ்வதி, திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி ஆய்வலராக பணி செய்து வருகிறார். 

 

முனியன் தற்கொலைக்கு காரணம் பணி பளுவா ?, அதிகாரிகள் டார்ச்சரா ?, குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்