Skip to main content

சிறப்பு பயிற்றுநர்கள்; தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்களுக்குப் பணி வரன்முறை செய்து நிரந்தரப் பணி வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களின் முக்கிய கோரிக்கையாக, "தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறப்பு பயிற்றுநர்கள் மூலம் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி அளிப்பதன் மூலம் இவர்களும் மற்ற சக மாணவர்களுடன் இணைந்து இவர்களுக்குத் தேவையான உள்ளடங்கிய கல்வியை வழங்கி வருகிறோம். இந்த மகத்தான சேவையில் ஈடுபட்டு வரும் எங்களது பணிக் காலத்தின் போது எவ்வித மருத்துவ விடுப்பும் வழங்கப்படுவதில்லை. பண பலன்களும் வழங்கப்படுவதில்லை.

 

பணியின் போது இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து, தங்களின்  20 ஆண்டுகால பணியை அரசு வரன்முறை செய்து தற்காலிக பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாம் நாளாகத் தொடர்ந்து வருகிறது.

 

போராட்டத்தில் கலந்துகொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. பெண் பயிற்றுநர் ஒருவர் தனது 6 மாத கைக்குழந்தையுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்