Skip to main content

புதிய பட்டியல் எடுத்து ரூபாய் 2 ஆயிரம் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை!!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

தமிழக அரசு கொடுக்கும் சிறப்பு நிதி ரூபாய் இரண்டாயிரத்தை வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும், அதற்கு அரசு பழைய பட்டியலை ரத்து செய்து விட்டு புதிய பட்டியல் எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அருந்ததியினர் இளைஞர் பேரவை அமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 

tngovt

 

அந்த அமைப்பின் மாநில தலைவர் வடிவேல் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

 

பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

 

"கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்தபடி, கடந்த 2003 ஆம் ஆண்டு மத்திய அரசு ஸ்வர்ண ஜெயந்தி நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அந்தியோ தயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடிசைவீட்டில் வசிப்பவர்களாகவும், சொந்தமாக நிலமோ வீடோ இல்லாமல் இருப்பவராகவும், குறிப்பாக ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் எஸ்.சி. மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

 

ஆனால் தற்போது இந்த பட்டியலில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதல் பல குளறுபடிகள் உள்ளது. பட்டியலில் பெயர் உள்ளவர்கள்

பலர் இறந்து விட்டனர், அரசு பணியில் பலர் உள்ளனர். சொந்தமாக நிலம், வீடு உள்ளவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே, இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். 

 

இந்த ஆண்டு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 24,000/- ஏழை கூலித்தொழிலாளர்கள், உடல் ஊனமுற்றோர்களுக்கும், ஆதரவற்றோர், விதவைகளுக்கு மற்றும் எஸ். சி. முன்னுரிமை அளித்து புதிய பட்டியலை தேர்வு செய்யவேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று ஆய்வு செய்து வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளோர் புதிய பட்டியல் தேர்வு செய்து  தமிழக அரசு வழங்கும் சிறப்பு உதவி தொகை ரூ. 2000/- வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிய பட்டியல் எடுத்தால் தான் உண்மையான ஏழை மக்களுக்கு சிறப்பு நிதி இரண்டாயிரம் கிடைக்கும் இல்லையேல் ஆளுங்கட்சிக்காரர்கள் அதிக பயன்பெறும் நிலையே ஏற்படும்" என்றனர்.

 

சார்ந்த செய்திகள்