Skip to main content

திருமுருகன் காந்தியை விடுதலை செய்! மே 17 இயக்க பொதுக் கூட்டம்

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
thiru1

 

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குகள் போட்டு சிறையில் அடைத்துள்ளது அரசு. மேலும் அவர் மீது தேச துரோக, பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற பெயரில் உள்ள UAPA சட்டப் பிரிவின்படியும் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பா.ஜ.க. மோடி அரசின் தூண்டுதலில் மாநில அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் திருமுருகன் காந்தியை திட்டமிட்டே கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. 


ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் அவரை உடனே  விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் மே 17 இயக்கம் சார்பில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக மாபெரும் பொதுக் கூட்டத்தை 8 ந் தேதி சனிக்கிழமை மாலை சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. திருமுருகன் காந்தியை விடுதலை செய்வதோடு  UAPA  என்ற கருப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். இப்பொதுக் கூட்டத்தில் சி.பி.ஐ. மு.வீரபாண்டியன், ம.தி.மு.க. மல்லை சத்யா, த.வா.க.வேல்முருகன், ம.ம.க. ஜவாஹில்லா, வி.சி ஆளுர் ஷாநவாஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட இயக்கங்களில் தலைவர்கள் கலந்து கொண்டு பேசவுள்ளனர். 


 


 

சார்ந்த செய்திகள்