Skip to main content

துப்பாக்கிய ஏந்திய செக்யூரிட்டிகள் தூங்கிய விவகாரம் - ஜெயம்ரவி மேனேஜருடன் சமரசம்

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

 

ஓய்வுபெற்ற முன்னாள் உதவி ஆணையர் ரகுராம், ‘டாப் கார்டு இண்டர்நேஷனல் செக்யூரிட்டி’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது.  

j

 

இந்நிறுவனத்தின் மூலம் சென்னை நந்தனத்தில் உள்ள நடிகர் ஜெயம் ரவியின் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  இரவுப்பணியில் இருந்தபோது பாதுகாவலர்கள் தூங்கியதாக குற்றம் சொல்லி, அவர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். 

 

இந்நிலையில், செக்யூரிட்டி நிறுவனத்தின் மேஜேனர் வின்செண்ட், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயம்ரவின் மேனேஜர் சேஷாத்ரி மீது புகார் அளித்துள்ளார்.  அப்புகாரில், இரண்டு பாதுகாவலர்களையும் திடீரென்று வேலையை விட்டு நிறுத்தியதோடு அல்லாமல் அவர்களின் நான்கு மாத சம்பளத்தை தராமல் இழுத்தடிக்கின்றனர்.   நீக்கப்பட்ட பாதுகாவலர்களில் ஒருவரை  தாங்களே சொந்தமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.  இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து ஜெயம்ரவி தரப்பினர் வின்செண்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூகமான உடன்பாடு எற்பட்டதால் போலீசில் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்