Skip to main content

சாதாரணமாக கஞ்சா கடத்திய கும்பல்! காவல்துறை அதிர்ச்சி! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

The gang caught by police who took cannabis

 

நாகை  மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. இதனைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பல்வேறுகட்ட நடவடிக்கை எடுத்தாலும், கடத்தல்காரர்கள் ஆம்புலன்ஸ், பால்வண்டி, சைக்கிள், பைக், மீன் ஏற்றிச்செல்லும் வாகனம், காய்கறி ஏற்றிவரும் வாகனம் என பல வகையில் யோசித்து கடத்திவருகின்றனர். 

 

இந்த நிலையில், நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்துள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டனர். மூட்டையில் இருபத்தியொரு கிலோ கஞ்சா இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

 

இதனையடுத்து மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மூவரும் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதியைச் சேர்ந்த ரெங்கநாதன், கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தோப்புத்துறையைச் சேர்ந்த ஹலித் என்பது தெரியவந்தது. இவர்கள் வேதாரண்யத்திலிருந்து நாகைக்குக் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்துவந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும், கஞ்சாவையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்