Skip to main content

மனவளர்ச்சி குறைவுடையோரின் நெகிழ்ச்சியான சந்திப்பு! -மகிழ்ச்சியில் திளைத்த பள்ளி!

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

 

பல வருடங்களுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுவதெல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. சிவகாசி – சாட்சியாபுரம் – எல்வின் நிலையம் – சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளியும், முன்னாள் மாணவர் கூடுகை என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. 39 வருடங்களுக்குப் பிறகு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவரவர் குடும்பத்தினரோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

 

Happily schooled

 

“பொதுவாக, மனவளர்ச்சி குறைவுடையோரை முழுவதுமாக சரிப்படுத்திவிட முடியாது. அதேநேரத்தில்,  அவர்களின் நிலை மேலும் தீவிரம் அடையாமல்  பார்த்துக்கொள்ள முடியும்.” என்றார் எல்வின் சென்டர்  சமூக சேவகரான ரெபேக்கா. ஆனாலும்,   அந்த முன்னாள் மாணவர்களில் 7 பேர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்கின்றனர். 

Happily schooled

 

இப்பள்ளியில் தான் கற்ற கல்வி மூலம்,  காளான் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஒருவர். இன்னொரு முன்னாள் மாணவருக்கு மனவளர்ச்சி குறைபாட்டோடு பேசவும் வராது. அவரோ, தான் வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணமும் செய்திருக்கிறார். மற்றொரு மாணவர், தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், தன்னுடைய உழைப்பால் பணம் சம்பாதித்து,  தன் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில்,  தங்களின் வாழ்க்கை அனுபவங்களை மாணவர்கள் பலரும் பகிர்ந்துகொண்டனர். 

 

Happily schooled

 

மனவளர்ச்சி குறைவுடையோருக்கு மனிதனின் சராசரி ஆயுள் இல்லையென்பதால், முன்னாள் மாணவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். கனத்த இதயத்தோடு, கண்ணீர்மல்க அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள் அந்த முன்னாள் மாணவர்கள்.

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூட, மகிழ்ச்சியில் திளைத்தது அந்தப்பள்ளி!

 

சார்ந்த செய்திகள்