Skip to main content

'அனைவரும் தேர்ச்சி...' மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

Everyone passed ... Chief Minister Stalin released the good news!

 

தமிழகத்தில் கரோனா தொற்றால் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அந்த மதிப்பீட்டில் கொடுக்கப்பட்ட மதிப்பெண் ஏற்கத்தக்க வகையில் இல்லை என நினைக்கும் மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செப்.16 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்.16 முதல் 28 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு செப்.15 முதல் 30 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கான துணைத்தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத விலக்களித்து இந்த உத்தரவை முதல்வர் வெளியிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்