Skip to main content

காங்கிரசுக்கு பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... கேரளா வாக்காளர்கள்

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான 3-ம் கட்ட தோ்தல் 14 மாநிலங்களில் 116 தொகுதிகளில் இன்று காலையில் இருந்தே வாக்கு பதிவு நடந்து வருகிறது. இதில் இரண்டு நட்சத்திர வேட்பாளர்களான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் பாஜக தலைவர் அமித்ஷா குஜராத்திலும் போட்டியிடுகின்றனர்.

 

vote to the Congress vote registered for bjp

 
          
இதில் கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 227 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. கேரளாவில் வாக்கு பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்தே வாக்கு பதிவு விறு விறு என்று நடந்து வருகிறது.
 

       
இந்த நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பூவார் செவ்வரயில் 157 ஆவது பூத்தில் காலை 8.30 மணிக்கு வாக்களித்த கமலேஷ் காங்கிரசுக்கு பட்டனை அழுத்தியபோது அதில் தாமரை பூ விழுந்ததால் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளிடம் கூறினார். அப்போது அங்கு 76 வாக்குகள் பதிவாகியிருந்தது. உடனே அந்த பூத்தில் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு மாற்று வாக்குபதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது. 

 

vote to the Congress vote registered for bjp


இதேபோல் பாப்பனங்கோடு ஹெச்.எஸ்.எல்.பி.எஸ் 139 ஆவது பூத்தில் கை சின்னத்துக்கு போடும்போது தாமரை காட்டியதாக வாக்காளர் குற்றம் சாட்டியதால் அங்கும் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் ஆலப்புழை சோ்த்தலையிலும் இதே பிரச்சினை இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவுக்கு வேண்டி தோ்தல் கமிஷன் அனைத்து வாக்கு பதிவு இயந்திரத்திலும் குறிப்பிட்ட ஒட்டுகளை பாஜகவுக்கு விழும்படி செய்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்