Skip to main content

மத்திய அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது! - ராமதாஸ் ட்வீட்

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

ddd

 

மத்திய அரசின் நடவடிக்கை பாமகவுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. கரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும்!

 

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிதான் குரல் கொடுத்தது. அந்த வகையில் மத்திய அரசின் நடவடிக்கை பாமகவுக்கு  மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!

 

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் சிபிஎஸ்இ போன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!” என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்