Skip to main content

சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பு பற்றி பிரேமலதா கருத்து

Published on 14/05/2019 | Edited on 14/05/2019
PREMALATHA



தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தற்போது தண்ணீர் பிரச்சனை உள்ளது. நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்கும்போது நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்துவோம். உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதன் மூலம் மக்களின் பிரச்சனையை உடனுக்குடன் தீர்க்க வழி வகுக்கும். 

 

தெலங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிகழ்வு முக்கியமானதாக தெரியவில்லை. மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமையும். தமிழகத்திலும் எங்களது கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் 3வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்