Skip to main content

பரபரப்பு புகார்; கிருஸ்துவர்களின் சி.எஸ்.ஐ.க்கு சொந்தமான இடத்தில் மோசடி

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
Fraud in a place owned by Christians CSI.
சர்ச்சைக்குரிய இடம்

கிருஸ்டின் ஆப் சவுத் இந்தியா எனப்படும் சி.எஸ்.ஐக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, தனியாருக்கு முறைக்கேடாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் சிஎஸ்ஐ அமைப்பில் ஒருவரான செல்வராஜ்  பேசியபோது, “கிறிஸ்டின் ஆப் சவுத் இந்தியா எனப்படும் சிஎஸ்ஐ-க்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை முறைகேடாக தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளார்கள். சி.எஸ்.ஐ. சென்னை ஒயிட் ரூட்டை தலைமை இடமாக கொண்டு கடந்த 45 வருடமாக செயல்பட்டு வரும் கிறிஸ்தவ அமைப்பு. இதன் கீழ் பிஷப் எனப்படும் பேராயர்கள் 24 பேர் உள்ளனர்.

சென்னை ஒயிட்ஸ் ரோட்டில் தலைமை இடமாக கொண்டு கடலூர் ,விழுப்புரம், அரக்கோணம், நகரி, பள்ளிப்பட்டு, புத்தூர், நெல்லூர் ஆகிய பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதற்கு பிஷப் எனப்படும் பேராயர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பேராயர் பதவிக்கு போட்டியிடலாம். அவர்கள் 67 வயது வரை பேராயராக ஊழியம் செய்யலாம். இதில் சென்னை பேராயரா இருந்த பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன் 67 வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

Fraud in a place owned by Christians CSI.
செல்வராஜ்

இதனைத் தொடர்ந்து  மே 14ஆம் தேதி(நாளை) பேராயர் காண தேர்தல் நடைபெறுகிறது. இதில் 22 பேர் போட்டியிடுகின்றனர். அதில் நான்கு பேரில் ஒருவரை பேராயராக தலைமை பேராயர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வார். இந்த நிலையில் தற்போது பேராயர் இல்லாத காரணத்தால் செயலாளராக அகஸ்டின் பிரேம் ராஜ், துணைத் தலைவராக ஜெயசீலன் ஞானோதயம், பொருளாளராக டாக்டர் கொர்னலிஸ் பதவி வகித்து வருகின்றனர். இதில் பேராயர் தேர்தலில் போட்டியிட இருக்கும் போதகர் பால் பிரான்சிஸ் போட்டியிடுகிறார், இவரின் தனிப்பட்ட செல்வாக்கில் கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் சி.எஸ்.ஐ கிறிஸ்துவ அமைப்புக்கு சொந்தமான 109 கிரவுண்ட் இடம் உள்ளது.
 
அதில் 2000 சதுர அடி நிலத்தை ஸ்ரீ சக்ரா என்டர்பிரைஸ்சஸ் எனப்படும் தனியார் நிறுவனத்திற்க்கு, பொருளாளர் கொர்னாலிஸ் மற்றும் போதகர் பால் பிரான்சிஸ் இணைந்து அந்த இடத்தை தனியாருக்கு முறைகேடாக லீசுக்கு வழங்கி உள்ளனர். அதில் செயலாளரும் அகஸ்டீன் பிரேம்ராஜ், துணைத் தலைவர் ஜெயசீலன் கையொப்பம் இல்லாமல் மோசடி செய்து நிலத்தை லீஸ்க்கு வழங்கியுள்ளனர். பேராயர் மட்டுமே இது போன்ற சி.எஸ்.ஐக்கு சொந்தமான இடத்தை லீசுக்கு வழங்கவோ, விற்கவோ அதிகாரம் உள்ளது. பேராயர் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற மோசடியில் லீசுக்கு இந்த இடத்தை விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதை சி.எஸ்.ஐ அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Fraud in a place owned by Christians CSI.
போதகர் பால் பிரான்சிஸ்

இது தொடர்பாக போதகர் பால் பிரான்சிஸை தொடர்பு கொண்ட போது,  அவர் நான் மீட்டிங்கில் உள்ளதால் தற்போது பேச முடியாது என்று தொடர்பை துண்டித்தார்.

சார்ந்த செய்திகள்