Skip to main content

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு குஷ்பு வாழ்த்து!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

rrr

 

காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த குஷ்பு அக்கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறார்.

 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோதுதான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் குஷ்பு. இன்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பிறந்தநாள் என்பதால், குஷ்பு தனது ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துப் பதிவில், ''பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற வாழ்த்துகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

 


 

 

 

சார்ந்த செய்திகள்