Skip to main content

“விமர்சனங்கள் மெருகேற உதவுகிறது” - ஸ்டார் படம் குறித்து இளன்

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
elan amotional experinence in theater from star movie

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஸ்டார்'. இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், கடந்த 10ஆம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. திரைப்பிரபலங்கள் நெல்சன் உட்பட பலரும் இப்படத்தை பாராட்டினர். 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் இளன் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து திரையரங்கில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா ? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது. ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன். அந்த கண்ணீரும் அன்பே. திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண் . கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது.

பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும்  ‘லவ் யூ’ என்று சொல்வதாகவே தோன்றியது.
இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது.
ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால் நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான். ஒரு சில (பல) விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி. கூட்டம் அலைமோதுகிறது . பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்