Skip to main content

திமுக மற்றும் பிரசாந்த் கிஷோர் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை கருத்து... கோபத்தில் திமுகவினர்!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

பிரசாந்த் கிஷோர் தனது 'பாத் பீகார் கி' பிரச்சாரத்திற்காக அனுமதியின்றி தனது படைப்புகளை பயன்படுத்தியதாக ஷாஷ்வத் கெளதம் என்ற இளைஞர் காவல்துறையில் புகாரளித்தார். இது தொடர்பாக தற்போது பிரசாந்த் கிஷோர் மீது மோசடி மற்றும் குற்றவியல் நம்பிக்கையை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒசாமா என்ற மற்றொரு நபருக்காக தான் உருவாக்கிய உள்ளடக்கத்தை பிரசாந்த் கிஷோர் பயன்படுத்தியதாக ஷாஷ்வத் தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து பிரசாந்த் கிஷோருக்கு எதிராக 420 (ஏமாற்றுதல்) மற்றும் 406 (குற்றவியல் நம்பிக்கையை மீறியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

pmk

 


இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிகாரில் நல்லாட்சி வழங்குவதற்கான தமது கருத்துருவை பிரசாந்த் கிஷோர் திருடிவிட்டதாக   புகார். வழக்குப் பதிவு : செய்தி - சரி தான்.பிரசாந்த் கிஷோர் தமிழக கூட்டாளிக்கு கற்றுத் தருகிறாரா...தமிழக கூட்டாளியிடம் கற்றுக் கொள்கிறாரா? என்பதே தெரியவில்லையே? என்னவோ நடக்குது... ஒன்னுமே புரியலை என்று கருத்து பதிவிட்டுள்ளார். ராமதாஸின் இந்த கருத்துக்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்