Skip to main content

தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவில் பதவி?

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.இதனால் அக்கட்சியிலிருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுக மற்றும அதிமுக கட்சியில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

dmk



இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன் அ.ம.மு.கவிலிருந்து விலகிய கரூர் செந்தி பாலாஜி திமுகவில் இணைந்தார். இதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அரவங்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தங்க தமிழ்செல்வனுக்கும் தேனி மாவட்டத்தில் அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவருக்கு தேனி மாவட்ட செயலாளர் பதவி திமுக கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தேனியில் தனது ஆதரவாளர்களுடன் இணைப்பு விழாவை கோலாகலமாக கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்