Skip to main content

காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி போலீசில் புகார்!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். 

 

அதில், காயத்ரி ரகுராம் சாதியை அடையாளப்படுத்தியும், மதத்தை அடையாளப்படுத்தியும் இரு பிரிவினர்களுக்கிடையே பதற்றத்தையும், மோதலையும் உருவாக்கும் வண்ணம் ஆக்ரோசமாக பேசி அதை வீடியோ பதிவு செய்து பொது வெளியிலும், வலைதளத்திலும் பிரச்சாரம் செய்து பரப்பி வருகிறார். இந்த காயத்ரி ரகுராம் வீடியோவில் உள்ள சொற்களும், கருத்துகளும் மத சாதி அடிப்படையில் விரோதங்களை ஏற்படுத்துவதோடு அல்லாமல் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது. இவருடைய அந்த செயலானது இந்த தண்டனை சட்டம் 153A, 153B, 295A, 298, 505(i) (ii) ஆகிய பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

மேலும் குற்ற விசாரணை முறை சட்டம் முச பிரிவு 95ன் படி இவர் வெளியிட்ட மேற்சொன்ன தண்டனைக்குரிய வீடியோ, ஆடியோ பதிவுகளை தமிழ்நாடு அரசு உடனே விசாரித்து பறிமுதல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்