Skip to main content

தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் குஜராத் மாநிலத்திற்கு முதலிடம் !

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் தங்கம் , வெள்ளி , மற்ற பொருட்கள் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1253.59 கோடி மதிப்பிழான பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிகப்பட்சமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் சுமார் 506.76 கோடி மதிப்பிழான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் தமிழகத்தில் சுமார் 72.94 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம், வெள்ளி, மற்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய்  153.318 கோடியிலான பொருட்கள் பறிமுதல் செய்தது தமிழக தேர்தல் பறக்கும் படையினர் . 

 

details



மேலும் ஆந்திர பிரதேசத்தில் சுமார் 83.2 கோடி ரூபாய் பணமும் , தஙகம் மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து மொத்தம் 142.98 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்களை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம். அதே போல் அதிகப்பட்ச பணம் கைப்பற்றிய மாநிலங்களில் ஆந்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது. மேலும் பஞ்சாப் , உத்திரபிரதேச மாநிலங்கள் தேர்தல் பறக்கும் படையினரின் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது ஒரு ரூபாய் கூட சிக்காத மாநிலங்கள் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லட்சத்தீவு ஆகும். 

ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாநில வாரியாக பட்டியல் தயார் செய்து தினமும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேர்தல் விதி மீறலால் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்