Skip to main content

கோயிலுக்கு வெளியே நடனம்.. இளம் பெண் மீது பாய்ந்த வழக்கு!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

hkj

 

கோயிலுக்கு வெளியே நடனமாடிய பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோவிலுக்கு ஆர்த்தி சாஹூ என்ற இளம் பெண் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளுடன் சாமி தரிசனம் செய்த அவருக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலுக்கு முன்பு ரீல்ஸ் வீடியோ எடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த அவர் உடன் வந்த நண்பர்களின் உதவியுடன் கோயிலுக்கு வெளியே வாசற்படியில் நின்று வீடியோ எடுத்துள்ளார்.

 

வீடியோ எடுத்த அவர் அன்று மாலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார். வீடியோ உடனடியாக அவரின் மற்ற நண்பர்களால் பகிரப்பட்டதால் சில மணி நேரங்களில் அந்த வீடியோ வைரலானது. சிலர் டான்ஸ் சூப்பர் என்று கமெண்ட் செய்த நிலையில், சிலர் கோவிலுக்கு முன்பு ஆபாச நடனமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்படவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்