Skip to main content

ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Supreme Court refuses to hear Hemant Soran's petition

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த சூழலில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் (31.01.2024) ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதே சமயம் அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராகவும், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யகோரியும் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

Supreme Court refuses to hear Hemant Soran's petition

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (02.02.2024) காலை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ் மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் “உயர்நீதி மன்றத்தை நாடாமல் ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள்” எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் எனவும் அறிவுத்தினர். 

சார்ந்த செய்திகள்