Skip to main content

திமுக அவசர செயற்குழு கூட்டம் தொடக்கம் - நிர்வாகிகள் கறுப்புத் துண்டுடன் வருகை!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
dmk


திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், திமுக குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து விவாதிக்கவும், திமுக செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று துவங்கியது.

சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். மேலும், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா சிறைப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ளார்.

முதலில், கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்து குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தை அரங்கத்திற்கு வெளியே உள்ளவர்கள் பார்க்க வசதியாக எல்இடி திரை அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

சார்ந்த செய்திகள்