Skip to main content

கூட்டத்தை பார்த்தாலே அலர்ஜி... தடியடி நடத்தி குரூரமாக ரசிக்கும் இந்த ஏ.எஸ்.பி. யார்?

Published on 22/02/2018 | Edited on 23/02/2018


selvaraதூத்துக்குடியில் செவ்வாய் அன்று நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியில் அமைதியாக சென்ற தொண்டர்களைப் போலீசார் அத்து மீறித் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், திருப்பூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அகிலேஷ் (4), மதுரையைச் சேர்ந்த சோலைக்குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதவிர, மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

அமைதியாய் சாத்வீக முறையில் சென்று கொண்டிருந்த மாக்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் பேரணியில் தடியடி நடத்தி அனைத்துக் கட்சியினராலும் வறுப்பட்டிக்கொண்டிருப்பவர் தூத்துக்குடி மாநகர ஏ.எஸ்.பி. செல்வன் நாகரத்தினம். யார் இவர்? விசாரணையில் இறங்கினால் அத்தனையும் அதிர்ச்சி ரகமே. பேரணி ஊர்வலம் எது நடந்தாலும் சினிமாப் பாணியில் தடியடியை நடத்தி குரூரமாக ரசிப்பவராம்  இந்த ஏ.எஸ்.பி. 

   "தீபாவளிப் பண்டிகையின் பொழுது இரவு நேரக்கடைகள் தான் ஏழைகளுக்கு வரப்பிரசாதம். 2016ம் ஆண்டு தீபாவளியின் பொழுது நகரின் மையப்பகுதியிலுள்ள ஜவுளிக்கடை இரவு பத்துமணியையும் தாண்டி திறந்துள்ளதாக படைப்பட்டாளத்துடன் ஜவுளிக்கடைக்குள் நுழைந்த இதே ஏ.எஸ்.பி.டீம் ஜவுளிக்கடையை துவம்சம் செய்து பூட்ட வைக்க, ஒட்டு மொத்த வியாபாரிகளும் சேர்ந்து சாலையில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்த மன்னிப்புக் கேட்டு அப்போது எஸ்கேப்பாகியுள்ளார் இவர். 
 

                                                                                                       

இது தான் இப்படியென்றால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் தடியடி நடத்தி ஆட்டம் காண்பித்தவர், கிறிஸ்துமல் விழா கேரல் ஊர்வலத்தின் பொழுதும் விழா லாரியை சிறைவைக்க, ஊர் மக்கள் ஒன்று திரண்டு நியாயம் கேட்டபொழுதும் தடியடி நடத்தி தன்னுடைய குரூரப்புத்தியை வெளிப்படுத்திய சினிமா போலீஸ் இவர். இப்பொழுது செந்நிறத்தொண்டர் பேரணியில் அதே பாணியில் கை வைக்க துரத்தியடிக்கப்பட்டுள்ளார்." என முந்தைய வரலாறை ஒப்புவிக்கின்றனர் உள்ளூர் மக்கள். 

 

  காவல்துறை அதிகாரி ஒருவரோ., "பூர்வீகம் கரூர் என்றாலும், வாழ்வாதாரத்திற்கு சென்னையிலேயே செட்டில் ஆன குடும்பம் இவருடையது. அப்பா இயற்கை எய்த அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்க்கப்பட்டவர். அதே வேளையில் இது ஒரு வகையான சினிமாத்தன சைக்கோனத்தனம். கூட்டத்தினைப் பார்த்தாலே அவருக்கு அலர்ஜி போல்.! உடனே லத்தி சார்ஜ் செய்வது தான் இவரது பாணி. தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தாலே யோசித்து பேசி முடிவெடுப்போம். இது கண்டிக்கத்தக்கது. துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக வரும்." என்றார் அவர். 

 

selvan rathinam


 

 இது இப்படியிருக்க, செந்நிறத்தொண்டர் பேரணியில் தடியடி நடத்திய ஏ.எஸ்.பி.செல்வன் நாகரத்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலம் முழுவதும் பெரும் அளவில் எதிர்ப்பினைக் காட்டவேண்டி வரும்." என எச்சரிக்கை விடுத்துள்ளன கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள். காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போல் இருக்ககூடாது. தடியடியில் சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

சார்ந்த செய்திகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

Next Story

கல்லூரி படிக்கும்போதே போராடி சிறை; என்றைக்குமான இளைஞர்களுக்கும் ரோல் மாடல் சங்கரய்யா

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

While studying in college, he fought in prison; Sankaraiah is a role model for today's youth

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இடதுசாரி இயக்கத்தின் மூத்தத் தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா, உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் 1921 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார் சங்கரய்யா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகக் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே சங்கரய்யா 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு சிறையிலிருந்தது வெளியே வந்த சங்கரய்யா, கல்லூரி மாணவர்களைத் திரட்டி பாளையங்கோட்டையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு நான்காண்டுக் காலம் சிறையில் இருந்தார். அதேபோல் 1939 மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப்  போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றுள்ளார்.

 

1964ல் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தலைவர்களில் குறிப்பிடத்தகுந்த தலைவராகவும் சங்கரய்யா இருந்தார். மேலும் ஜனசக்தி நாளிதழில் முதல் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார்வப்பூர்வ இதழான தீக்கதிரின் முதல் ஆசிரியர் சங்கரய்யா என்பதும் குறிப்பிடத்தகுந்தது. மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறையும், மதுரை மேற்கு தொகுதியில் ஒரு முறையும் என மூன்று முறை தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இறுதிக் காலங்களில் தனது 93 வயதிலும் ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடியவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்னும் பின்னும் எனச் சிறை வாழ்க்கை அனுபவித்தவர். பொதுவாழ்க்கையில் போராட்டத்திற்கும் சிறைக்கும் அஞ்சாமல் சேவையாற்றிய அவரின் தொண்டைப் போற்றும் வகையில் திமுக தலைமையிலான தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது கொடுத்து கவுரவித்திருந்தது. தமிழக அரசு கொடுத்திருந்த தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கியிருந்த ரூபாய் 10 லட்சத்தை கொரோனா நிவாரணத்திற்கே வழங்கினார்.

 

கல்லூரி பருவத்திலிருந்து தன் இறுதிக் காலம் வரை போராட்டம், சிறை என உரிமைகளுக்குப் போராடி நின்ற சங்கரய்யா, அன்றைய இன்றைய என என்றைக்குமான இளைஞர்களுக்கும் ரோல் மாடல் தான் என். சங்கரய்யா.