ADVERTISEMENT

அடிக்கடி பேஸ்புக் பக்கம் பாதிக்கப்படும்... நித்தியானந்தா மீது பெண் பரபரப்பு புகார்... வெளிவராத அதிர்ச்சி தகவல்! 

10:15 AM Dec 02, 2019 | Anonymous (not verified)

பரபரப்பான செய்திகளுக்கு புகழ் பெற்ற நித்யானந்தா, சமீபகாலமாக தன்னைப் பற்றி வரும் செய்திகளுக்குப் பதில் சொல்லும்விதமாக வாய் திறந்திருக்கிறார். "நான் அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வேன்'' என்கிறார் தெம்பாக. ஆனால் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என குஜராத் மாநில போலீஸார் நித்யானந்தாவுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆடு-புலி ஆட்டத்தின் க்ளைமாக்ஸ் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள்.

ADVERTISEMENT



ADVERTISEMENT



தமிழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா தான் இந்த பரபரப்பான சம்பவங்களின் கதாநாயகன். இவரது நான்கு குழந்தைகளில் லோபமுத்ரா சர்மா வயது 21, நந்திதா சர்மா வயது 18 ஆகிய இரண்டு பெண் குழந்தைகளை நித்தி தன்னுடன் அழைத்துக்கொண்டு வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். "நான் மொத்தம் மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் நித்தியின் குருகுலப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன். அத்தோடு 2013-ஆம் ஆண்டு முதல் 2018 இறுதியில் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரியும்வரை நித்தி என்னை அவரது செயலாளராக வைத்திருந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ்மொழி தெரிந்த என்னை குழந்தைகளிடம் பேசவே அனுமதிக்கவில்லை. அவர்களுடன் பேசியபோது, எனது வயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அவர்களை நித்தி, பாலியல் ரீதியாக பயன்படுத்தியபோது அவர்கள் 18 வயதை தொடாத மைனர் பெண்களாகவே இருந்தார்கள்'' என டி.வி.க்களில் அவர் பேட்டி கொடுத்ததோடு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தயார் செய்தார்.



அதை விசாரித்த நீதிமன்றம், சர்வதேச போலீசாரின் உதவியோடு ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க உத்தரவிட்டது. இதற்காக ஒரு சிறப்புப் படை, நித்யானந்தா ஏற்கனவே சென்றிருந்த நேபாள நாட்டிற்குச் சென்றது. அத்துடன் ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் உட்பட பலரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட நித்தியின் சிஷ்யைகளான சாத்வி பிரான் பிரியானந்தா, பிரியாத்வாரித்திகரன் ஆகியோரின் ஜாமீன் மனுவை நிராகரித்து அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். நித்தி மேல் நவம்பர் 21-ஆம் தேதி சாரா லாண்ட்ரி என்கிற பெண் பக்தை ஒரு பரபரப்பான புகார் ஒன்றை வெளிப் படுத்தியுள்ளார். குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட நித்தியின் சிஷ்யைகளான பிரான் பிரியானந்தா, பிரியாத்வா ரித்திகரன் மற்றும் ரஞ்சிதாவோடு இணைந்து நித்தி நடத்தும் குருகுலப் பள்ளி எனப்படும் பள்ளியை எட்டு வருடமாக நிர்வாகம் செய்தவர் சாரா லாண்ட்ரி.



"நான் முதலில் பிரான் பிரியானந்தாவை சந்தித்தபோது சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் பெண்ணாகத்தான் உணர்ந்தேன். நித்தியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு விஷமாக மாறிப் போனார். அந்த ஆசிரமத்தில் இருப்பவர்களை எப்பொழுதும் ரஞ்சிதா, பிரான் பிரியானந்தா ஆகியோர் மிரட்டுவார்கள். ஒருமுறை நித்யானந்தாவின் வீடியோ பதிவுகளை கொஞ்சம் லேட்டாக பதிவு செய்தேன் என்பதற்காக இருவரும் என்னை கன்னாபின்னாவென்று திட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். கடைசியில் தவறே செய்யாத நான், செய்ததாகக் கதறி அழுதேன். அதன்பிறகுதான் என்னை விட்டார்கள். இப்படிச் செய்யாத குற்றத்தை செய்ததாகச் சொல்லி கொடுமைப்படுத்துவதற்கு பின்னணியில் நித்தி இருந்தார். தவறு செய்யும் ஆசிரமவாசிகள் நித்தியை தனியாக போய் சந்தித்தால் அவர்களுக்கு தவறு செய்யாத சக்தியை நித்தி தருவார்... இதுதான் ஆசிரம நடைமுறை.


இதுபோல நித்தியிடம் அனுப்பப்படுபவர்களை நித்தி பதம் பார்ப்பார். இப்படி ஒரு பதினாறு வயது பெண்ணை கொடுமைப்படுத்தி நித்தியிடம் சக்தி பெற அனுப்பி வைத்தார்கள். அவள் நித்தியின் காம இச்சைகளுக்கு உடன்படவில்லை என்பதால் மறுபடியும் அவளைக் கொடுமைப்படுத்தினார்கள். அந்தப் பெண்ணிடம் நான் பேசினேன். அவள் நித்தி, "அசிங்க அசிங்கமாக மெஸேஜ் அனுப்புகிறார். என்னுடைய நிர்வாணப் படங்களை அனுப்புமாறு கேட்கிறார்' என்றாள். இந்தப் பெண்ணிற்கு வயது 17. இவள் மேஜராகவில்லை.

அதேபோல் 16 வயதுப் பெண் மற்றும் பதினைந்து வயதுப் பெண்ணிடமும் நித்தி தனது காம வக்ரத்தைக் காட்டியிருக்கிறார். இந்தப் பெண்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். நான் என்னிடம் விசாரித்த இந்திய போலீசாரிடம் குரு குலத்தில் நடக்கும் கொடுமைகளை, அடி-உதை போன்றவற்றைப் புகாராகத் தெரிவித்திருக்கிறேன். இதைப் பற்றி போலீசார் முறையாக விசாரணை நடத்தினால் 18 வயதுக்கு குறைந்த சிறுமிகளை சட்ட விரோதமாக நித்யானந்தா கற்பழித்த விவரம் தெரியும். அத்துடன் அந்தக் குழந்தைகளை நிர்வாணப்படுத்தி, புகைப்படங்கள் எடுத்து அதை நித்தியும் அவருக்கு நெருக்கமானவர்களும் முகநூல் வழியே பகிர்ந்துகொண்ட கொடுமையும் தெரியும்.


அடிக்கடி "எனது முகநூல் பக்கம் பாதிக்கப்பட்டுள்ளது' என நித்தி சொல்வார். முகநூல் வழியாக நித்தி நடத்தும் கூத்துகளை மறைக்க முகநூல் கம்பெனியில் வேலை செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூலமாக அந்தப் பதிவு களை அழிக்கும் வேலையை அடிக்கடி செய்வார். அதற்காக "எனது முகநூலை அன்னியர் ஒருவர் ஆக்கிரமிக்கிறார்' என பொய்யை அவிழ்த்துவிடுவார். இதற்காகவே ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பையும் நித்தி நடத்துகிறார். அவரது ஆசிரமத்தில் இருக்கும் சிறுவயது பெண்களை நித்திக்கு அனுப்பி வைக்க பிரான் பிரியானந்தா தலைமையில் ஒரு வாட்ஸ்அப் குரூப்பும் இயங்குகிறது. அதில் நித்தி பேசுவார். அந்தப் பெண்கள் நித்தியின் அழைப்புக்கு இசைந்து போகவேண்டும்.

இதுபோல காம இச்சையுடன் தவறான முறையில் காமரசம் கலந்த போட்டோக்களை நித்தி எனக்கும் அனுப்பி, என்னிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார். நித்தியின் காம இச்சைக்கு பலியாகிவிட்டார்கள் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள். நித்திக்கு நிரந்தரமாக ஆசிரமப் பெண்களை சப்ளை செய்பவர் ரஞ்சிதா. ஈக்வடார் நாட்டில் ஒளிந்துகொண்டு இங்கிருக்கும் சிறுமிகளை ஒவ்வொருவராக அழைத்து தனது காம இச்சைக்கு பலியாக்கும் நித்தியையும் ரஞ்சிதாவையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்'' என்கிறார் சாரா லாண்ட்ரி. கனடா நாட்டைச் சேர்ந்த இவரின் புகார் மீது வழக்குப் பதிவு செய்ய கர்நாடகாவைச் சேர்ந்த காவல்துறை முடிவு செய்துள்ளது. நித்தியின் குருகுலம் அமைந்துள்ள கர்நாடகமும், ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகளை அடைத்து வைத்துள்ள குஜராத்தும் பா.ஜ.க.வின் ஆட்சியிலிருக்கின்றன. நித்தி மீது கடும் கோபத்திலிருக்கும் பா.ஜ.க., அவர் மீது நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. நித்திக்கு எதிராக நிற்கும் ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்றோர் நித்தியை ஈக்வடார் நாட்டிலிருந்து தூக்கி கொண்டுவரும் வகையில்... ஜனார்த்தன சர்மா, சாரா லாண்ட்ரி ஆகியோரின் புகார்கள் அமைந்துள்ளதையும், அதை குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதையும் வைத்து நித்தியை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைத் தெரிந்துகொண்ட நித்தி, "எனது குருகுலம் பற்றி ஜனார்த்தன சர்மா, சாரா ஆகியோர் சொல்வது பொய் என குருகுல மாணவர்களை யு டியூப்பில் பேச வைத்துள்ளார். இதற்கிடையே மகாராஷ்டிராவின் அரசியலால் தலைகுனிந்த பா.ஜ.க. தனது இமேஜை காப்பாற்ற நித்தியை கைது செய்ய தயாராகிவிட்டது என தகவல்கள் பரவ... அவர் தலைமறைவாகியுள்ள ஈக்வடார் நாட்டிலேயே ரகசியமான இடத்திற்குப் போய் ஒளிந்துகொண்டார் என்கிறார்கள் நித்தி ஆசிரமவாசிகள். நித்தியும் ரஞ்சிதாவுமே ஒரு வீடியோவில் சிக்கினார்கள். அந்த வழக்குகள் ஒருபக்கம் உள்ளன. திருச்சியைச் சேர்ந்த சங்கீதா என்கிற பெண் மர்மமாக மரணமடைந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. இப்பொழுது ஜனார்த்தன சர்மா, சாரா போன்றவர்கள் கொடுத்த புகார்கள் எழுந்துள்ளன. எனினும் நித்தி தனது காமச்சேட்டைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிஸியாகவே இருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT